Saturday 23 May 2020

காலச் சுவடுகள் பற்றிய திறனாய்வு !

தமிழ்ப் பணி மன்றம் முகநூலில்  அதன்  ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதிவரும் காலச் சுவடுகள் பற்றி நான் எழுதிய கருத்துரைப் பாடல்கள் !

---------------------------------------------------------------------------



 சுவடு 10 தொடர்பாக  நான் எழுதிய கருத்துரை !
(29-04-2020)

            வளர்தமிழை  நாளும்  வளர்க்கின்ற செம்மல் !
            மலர்ந்ததிரு  நாளில்  வணங்குகிறேன்அன்னார்,
            இளங்காலைப்  போதின்  இனியதென்றல்,  நெஞ்ச
            நலங்கொண்டு  வாழ்வார்பன்  னாள்.


 சுவடு 14 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(03-05-2020)

            அரியபல  சொற்கள் ! அரிய  நினைவாற்றல் !
            புரிய வைக்கும் புலமை  -  அரிய,
            பெரியீர் !  இணையாய்ப்  பிறிதொருவர்  இல்லை !
            சரியாயாள் கின்றீர் தமிழ் !

  சுவடு 19 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(08-05-2020)
            
            பண்டகத்துக் காப்பாளர் !  பைந்தமிழ்க்கும் காப்பாளர் !
            மன்றல்தம்  தங்கைக்குப் பாட்டால்  நடத்திவைத்த,
            தன்தந்தை  தம்நிலையார் ! தாழா உயர்வாழ்க்கை !
            பண்பாட்டுச் செம்மல் ! மறைமணியை          வணங்குகின்றேன் !


 சுவடு 27 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(16-05-2020)

            கனிந்த தமிழ்ப்பேர்கள் கலைச்சொற்க ளாக்கம் !
            இணையில் நினைவாற்றல் எல்லாம்  -  இணைந்த
            மணியே  மறைமணியார் ! மற்றென்ன  சொல்ல ?
            தனித்தன்மை  வாய்ந்த  தகை !

  சுவடு 32 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
    (21-05-2020)       

            சொல்லும் முறையழகு;  துன்ப  நிகழ்ச்சிகளை
            மெல்லத்  துயரயிழை  மேலோட,  -  சொல்லுகின்ற
            பண்டகத்துப்  காப்பாளர்  வல்லார்  மறைமணியார்,
            தண்டமிழ்க்கும்  காப்பாளர்  தான் !

-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
அரசி பழனியப்பன்
(palaniappanarasi@gmail.com)
(தி.பி.2051,விடை(வைகாசி),11)
(24-05-2020)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


திரு.வை.வேதரெத்தினம்                                                       திரு.சிங்கார பழனியப்பன்